மேலும் செய்திகள்
சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம்
05-Oct-2025
சி த்தாமூர் அருகே மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து, போரூர் கிராமத்திற்கு செல்லும் 3 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையை போரூர், நுகும்பல், விளாங்காடு, கூனங்கரணை உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். தினமும் எராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. முறையான பராமரிப்பு இல்லாததால், சாலை சேதமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் விவசாய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மழைக்காலத்தில் சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். - கந்தவேல், சித்தாமூர்.
05-Oct-2025