உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போஸ்டர் செய்தி மறைமலைநகரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இன்ஜினியர் கைது

போஸ்டர் செய்தி மறைமலைநகரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இன்ஜினியர் கைது

மறைமலைநகர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.இவர், கடந்த 19ம் தேதி மதியம், விடுதியின் இரண்டாவது தளத்தில் உள்ள குளியல் அறையில் குளித்துள்ளார்.அப்போது, மர்ம நபர் ஒருவர், ஜன்னல் வழியாக இளம்பெண்ணை, மொபைல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.இதைப் பார்த்து இளம்பெண் கூச்சலிடவே, அந்த மர்ம நபர் தப்பிச் சென்றார்.இதுகுறித்து இளம்பெண் அன்று மாலை, மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், இச்செயலில் ஈடுபட்ட பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அருள்தாஸ்,24, என்பவரை நேற்று முன்தினம் மாலை கைது செய்தனர்.இன்ஜினியரான அருள்தாஸ், மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தது தெரிந்தது. விசாரணைக்குப் பின் அருள்தாஸ், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை