உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செட்டிபுண்ணியம் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்

செட்டிபுண்ணியம் சாலையில் பள்ளங்கள் வாகன ஓட்டிகள் பீதியில் பயணம்

சிங்கபெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி - செட்டிபுண்ணியம் சாலை 4 கி.மீ., துாரம் கொண்டது.இந்த சாலையை பயன்படுத்தி வடகால், செட்டிபுண்ணியம், வெங்கடாபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர், மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் என, பலரும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் உள்ள கல் குவாரி 'கிரசர்'களில் இருந்தும், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இந்த வழியே சென்று வருகின்றன.இந்த சாலை சேதமடைந்து, பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், அதிக அளவில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் முயலும் போது, வனத்துறையினர் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர காலங்களில் கூட, விரைவாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி