உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமடைந்த சாலையில் பள்ளங்கள் சாய்லஷ்மி நகர்வாசிகள் அவதி

சேதமடைந்த சாலையில் பள்ளங்கள் சாய்லஷ்மி நகர்வாசிகள் அவதி

நென்மேலி, நென்மேலி ஊராட்சி, சாய் லஷ்மி நகரில், சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு அடுத்த, நென்மேலி ஊராட்சி, சாய் லஷ்மி நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்நகரில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை சேதமடைந்து, போக்குவரத்துக்கு பயனற்ற சாலையாக மாறியுள்ளது.இவ்வழியாக பள்ளி, கல்லுாரி மற்றும் அத்தியாவசிய பணிக்குச் செல்வோர் சிரமப்படுகின்றனர். சாலையில், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், தடுமாறி விழுந்து படுகாயமடைகின்றனர்.இச்சாலையை சீரமைக்க, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம், கடந்த இரண்டு ஆண்டுகளாக பகுதிவாசிகள் மனு அளித்து வருகின்றனர்.இம்மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரிய விபத்துகள் நடப்பதற்குள், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை