உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி சுற்று பகுதியில் 17 இடத்தில் இன்று மின்தடை

கூடுவாஞ்சேரி சுற்று பகுதியில் 17 இடத்தில் இன்று மின்தடை

கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி துணை மின் நிலையத்தில், இன்று காலை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.இதனால், கூடுவாஞ்சேரி சுற்றுப்பகுதியில், 17 இடங்களில், இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும் என, அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மின் வினியோக கழகம், மறைமலை நகர் கோட்டம், செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி 110/33-11 கே.வி., துணை மின் நிலையத்தில், இன்று அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.இதனால் ராஜேஸ்வரி நகர், விக்னராஜபுரம், வல்லாஞ்சேரி, அண்ணா சாலை, சதுரப்பதாங்கல், டிபென்ஸ் காலனி, கிருஷ்ணாபுரம், லட்சுமி கார்டன், குமரன் நகர், நாராயணபுரம் ஆகிய பகுதிகளில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும்.அதுபோல், நகர்ப்புற வாரிய குடியிருப்பு, ராகவேந்திரா நகர், எம்.ஜி.நகர் ஒரு பகுதி, நெல்லிக்குப்பம் சாலை, விஷ்ணு பிரியா நகர், ஜெயா நகர், காமேஷ்வரி நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், மின் வினியோகம் தடை செய்யப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ