மேலும் செய்திகள்
ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் 'விறுவிறு'
10-Nov-2025
மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சி, ஞானகிரீஸ்வரன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கை வசதி இல் லாமல், கர்ப்பிணியர் அவ திப்பட்டு வருகின்றனர். கருங்குழி பேரூராட்சி, ஞானகிரீஸ்வரன்பேட்டையில், சென்னை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியர், இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சுகாதார நிலையத் தில், கர்ப்பிணியர் சாய்ந்து அமரும் வகையில், இருக்கை வசதி இல்லை. இதனால் சிலர், கான்கிரீட் தரையில் சிரமப்பட்டு அமர வேண்டியுள்ளது. மேலும் சிலர், சுகாதார நிலைய வாயில் பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து இளைப்பாறுகின்றனர். இந்த பகுதியில், மின்விசிறி வசதியும் இல்லாததால், கர்ப்பிணியர் சிரமப்படுகின்றனர். எனவே, இந்த சுகாதார நிலையத்தில், இருக்கை வசதி ஏற்படுத்த, சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கர்ப்பிணி யர் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஞானகிரீஸ்வரன்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளை விட, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகளவில் கர்ப்பிணியர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, கர்ப்பிணியர் பாதுகாப்பாக அமரும் வகையில், இரும்பாலான சாய்வு தள இருக்கைகள் அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - க.ரா.முருகன், 42, சமூக ஆர்வலர், கருங்குழி.
10-Nov-2025