உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முதல்வர் செங்கை வருகை முன்னேற்பாடுகள் தயார்

முதல்வர் செங்கை வருகை முன்னேற்பாடுகள் தயார்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அரசு சார்பில் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அரங்கம் அமைக்கும் பணி மற்றும் முன்னேற்பாடுகளை நேற்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள், இருக்கை வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மேடை அமைப்பு, வாகன நிறுத்துமிடங்கள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து கலெக்டர் அருண்ராஜிடம் கேட்டறிந்தார்.ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா‍, செங்கல்பட்டு எஸ்.பி., சாய்பிரணீத் மற்றும் தி.மு.க., பிரமுகர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை