உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 47 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல்

47 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல்

மேடவாக்கம்:சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில், மேடவாக்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த நவ., 27ம் தேதி முதல் டிச., 27ம் தேதி வரை பிறந்த 47 குழந்தைகளுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மோதிரம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா, நேற்று நடந்தது.மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார். நிகழ்ச்சியில், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., எஸ்.அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ''மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய எங்களுக்கு ஒரு காரணமாக உதயநிதி பிறந்தநாளை கொண்டாடி வருகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ