உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு சிறப்பு இல்லத்திற்கு உபகரணம் வழங்கல்

அரசு சிறப்பு இல்லத்திற்கு உபகரணம் வழங்கல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்திற்கு உபகரணங்களை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த இல்லத்தை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் ஆய்வு செய்து, அங்கு தேவையான வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.அதன் பின், இல்லம் மற்றும் சிறுவர்களுக்கு தேவையான 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, கலெக்டர் வழங்கினார். ஆய்வின் போது, செங்கல்பட்டு தாசில்தார் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை