அடிப்படை வசதிகள் இல்லாத காரணை புதுச்சேரி ஊராட்சி
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காரணை புதுச்சேரி ஊராட்சி, இங்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி தலைவியாக தி.மு.க., வை சேர்ந்த நளினி இருந்து வருகிறார். ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளான, சாலை , குடிநீர், தெருவிளக்கு வசதி, குப்பைகளை முறையாக சேகரித்தல் உள்ளிட்ட, பணிகள் முறையாக நடைபெறவில்லை, என அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, அவர்கள் கூறியதாவது:காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய், குடிநீர், குப்பைகளை வீடுகள் தோறும் வந்து முறையாக சேகரித்தல் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை .விநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவருக்கு, ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும், நேரிலும் புகார் மனுக்களை வழங்கி வருகிறோம். ஆனால் எங்கள் மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல்,எவ்வித பணிகளும் நடைபெறாமல் உள்ளது . எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தர, உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.