உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுக்கூடமாக மாறிய ரயில்வே பாலம்

மதுக்கூடமாக மாறிய ரயில்வே பாலம்

செங்கல்பட்டு நகராட்சி, அண்ணா நகர் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அதையொட்டி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியை, மதுக்கூடமாக பலர் பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே மேம்பாலம் கீழ்ப்பகுதி முழுதுமாக 'குடி'மகன்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, மதுபானங்களை குடித்துவிட்டு, போதை தலைக்கு ஏறியதும், பாட்டில்களை தரையில் போட்டு உடைக்கின்றனர். சாலையில் நடந்து செல்வோரை வம்புக்கு இழுக்கின்றனர். இதனால், அடிக்கடி சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இப்பிரச்னையால், மாலை 6:00 மணிக்கு மேல், பெண்கள் தனியாக செல்வதை தவிர்த்து, வேறு வழியாக, குடியிருப்புகளுக்கு செல்கின்றனர். வர்த்தக பகுதியில் உள்ள கடைகளுக்கு பெண்கள் வருகை குறைவதால், வியாபாரிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியும் பயனில்லை. எனவே, பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் வேண்டும். போதையில் ரகளை செய்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மா. செல்வராசு, செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !