மழைநீர் கால்வாய் பணி செங்கல்பட்டில் துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, தேவராஜனார் தெருவில், மழைநீர் கால்வாய் கட்டும் பணி துவங்கி உள்ளது.செங்கல்பட்டு வேதாசலம் நகரில், தேவராஜனார் தெரு உள்ளது. இங்கு வீடுகள், தனியார் மருத்துவமனைகள், கடைகள் உள்ளன. இப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது.அதன் பின், கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் துார்ந்து, கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது.இதனால், மழைநீர் கால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதைத்தொடர்ந்து, மழைநீர் கால்வாயை துார்வாரி சீரமைக்கவும், கால்வாய் கட்டவும், 8 லட்சம் ரூபாயை, நகராட்சி நிர்வாகம் ஓதுக்கீடு செய்தது. இப்பணிக்கு 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர். தற்போது, கால்வாய் துார் வாரி சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. இப்பணி ஒரு மாதத்தில் முடிக்கப்படும் என, நகராட்சி பொறியாளர் தெரிவித்துள்ளார்.