உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்

மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணி துவக்கம்

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 27வது வார்டுக்கு உட்பட்ட சீனிவாசபுரம், கே.கே.நகர் முதல் பிரதான சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாய்கள் தேக்கம் அடைந்து, செடி, கொடிகள் படர்ந்து காணப்பட்டன.அவற்றை அகற்றி சீரமைக்க வேண்டியது தொடர்பாக, 27வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கலைச்செல்வன், நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் ராணி ஆகியோடிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.அதைத் தொடர்ந்து, 27-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார் வாரி, அவற்றில் படர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றும் பணிக்கு உத்தரவிட்டனர்.தொடர்ந்து, நகராட்சி துாய்மை பணியாளர்கள், குறிப்பிட்ட வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ