உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமி பலாத்காரம்: ஒருவருக்கு 20 ஆண்டு

சிறுமி பலாத்காரம்: ஒருவருக்கு 20 ஆண்டு

செங்கல்பட்டு:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை, புனிததோமையார்மலை மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 10 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ஜான்பால், 47, என்பவர், சிறுமியின் தந்தைக்கு நண்பர் என்பதால், அடிக்கடி சிறுமி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.கடந்த 2021 ஏப்., 17ம் தேதி, வீட்டின் அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது கீர்த்தி ஜான்பால், வீட்டின் சுற்றுச்சுவர் அருகே உள்ள சந்துக்குள் சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.சிறுமி சத்தம் போட்ட போது, அவரது தாய் ஓடி வந்ததும், கீர்த்தி ஜான்பால் தப்பிச் சென்றார்.இதுகுறித்த புகாரின்படி, புனிததோமையார்மலை மகளிர் காவல் நிலைய போலீசார் 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து, கீர்த்தி ஜான்பாலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கீர்த்தி ஜான்பாலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால், ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின், கீர்த்தி ஜான்பாலை, சென்னை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை