ரூ.5 லட்சம் மதிப்பிலான செம்மர கட்டை பறிமுதல்
பூந்தமல்லி, பூந்தமல்லியில் காரில் கடத்தி செல்லப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மீஞ்சூர்—வண்டலுார் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லியில், போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த வழியே சென்ற 'டொயோட்டா கரோலா' காரை சோதனை செய்ய நிறுத்தினர். அப்போது, காரில் பயணித்த ஒருவர் தப்பியோடிய நிலையில், ஓட்டுநரை பிடித்து, காரை போலீசார் சோதனை செய்தனர். காரில் 500 கிலோ எடைக்கொண்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மர கட்டைகள் இருப்பது தெரிந்தது. காரை ஓட்டிவந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், 38, என்பரை போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் செம் மரக்கட்டைகளை பறி முதல் செய்து திருவள்ளூர் வனத்துறையிடம் ஒப் படைத்தனர். காரிலிருந்து தப்பி ஓடிய நபரை பூந்தமல்லி போலீசார் தேடி வருகின்றனர்.