உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இலவச திருமணத்திற்கு சீர்வரிசை பதிவு துவக்கம்

இலவச திருமணத்திற்கு சீர்வரிசை பதிவு துவக்கம்

மதுராந்தகம்:தமிழ்நாடு அரசு ஹிந்து சமய அறநிலைத் துறையின் சார்பாக, பிப்., 14ம் தேதி இலவச திருமணங்கள் நடைபெற உள்ளன.இதில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோவில்களில் திருமணம் செய்யும் மணமக்களுக்காக, திருமணத்திற்கான அரை சவரன் தாலி, கட்டில், பீரோ, மெத்தை, சீர்வரிசை சாமான்கள் அரசு சார்பாக அளிக்கப்பட உள்ளன.கோவிலில் திருமணம் செய்ய முன் வருபவர்கள், அவர்களுடைய மணமகள், மணமகன் ஆகியோரின் ஆதார் அட்டை நகலை, திருமலைவையாவூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் திருக்கோவில் செயல் அலுவலரிடம் அளித்து, முன்பதிவு செய்து பயன் பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் விவரங்களுக்கு, கோவில் செயல் அலுவலரை, 9940651389 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ