உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலை நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம்

 சாலை நடுவே இருந்த மின்கம்பம் அகற்றம்

ஊரப்பாக்கம், நவ. 27- ஊரப்பாக்கத்தில், சாலை நடுவே இருந்த மின்கம்பம், போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துகளையும் ஏற்படுத்தி வந்த நிலையில், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, அந்த மின்கம்பம் அகற்றப்பட்டு, சாலையோரம் நடப்பட்டது. ஊரப்பாக்கம் ஊராட்சி, 8வது வார்டு, செல்வராஜ் நகர், செந்தமிழ் சாலையில், 300க்கும் மேற்பட்ட வீடுகளில், 1500க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர். இங்கு, கடந்த 20 ஆண்டாக, சாலையின் நடுவே, மின்கம்பம் இருந்தது. இதனால், ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் பயணிக்க பெரும் இடையூறு ஏற்பட்டது.தவிர, இரவு நேரங்களில், மின்கம்பத்தின் மீது மோதும் வாகன ஓட்டிகள், பலத்த காயமடைந்ததும் தொடர்ந்தது. இந்த கம்பத்தை அகற்றி, சாலையோரம் நடவேண்டும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பகுதிவாசிகள் தொடர்ந்து புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சாலை நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றி, சாலையோரம் நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ