உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இடிந்து விழும் நிலையில் இருந்த இரும்பு நடை மேம்பாலம் அகற்றம்

இடிந்து விழும் நிலையில் இருந்த இரும்பு நடை மேம்பாலம் அகற்றம்

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பொதுமக்கள் சாலையை கடக்கும் வகையில், இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.மோச்சேரி கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் கால்நடை துறை அலுவலகம், மசூதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று வந்தனர்.இப்பகுதியில் சாலையை கடக்கும்போது, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகமாகின. எனவே, மதுராந்தகம் ஏரிக்கரை இறக்கத்தில், சாலையின் குறுக்கே, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.விபத்தை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட இரும்பு நடை மேம்பாலம், பராமரிப்பின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக இரும்பு துாண்கள், இரும்பு படிkகட்டுகள், துருப்பிடித்து இருந்தனஇதனால், எப்பொழுது வேண்டுமானாலும், தேசிய நெடுஞ்சாலையில் கீழே விழக்கூடிய அபாயம் இருந்து வந்தது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அகற்றப்பட வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.நேற்று, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால், பயன்பாடு இன்றி இருந்த இரும்பு நடைபாதை மேம்பாலம், ராட்சத பளு துாக்கும் இயந்திரங்கள் வாயிலாக அகற்றப்பட்டது.இதன் காரணமாக, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் பகுதியில் மட்டும் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதனால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை