உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை ஜி.எஸ்.டி., சாலையில் ரூ.2.5 கோடியில் சீரமைப்பு பணி

செங்கை ஜி.எஸ்.டி., சாலையில் ரூ.2.5 கோடியில் சீரமைப்பு பணி

செங்கல்பட்டு, ஜன. 16-செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, புதிய பேருந்து நிலையம் ராட்டிணங் கிணறு வரை, ஆறு ஆண்டுகளுக்கு முன் சாலை போடப்பட்டது. அந்த சாலை பழுதடைந்துள்ளதால், புதிய சாலை அமைக்க, நெடுஞ்சாலைத்துறையினர்பரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து, பழைய பேருந்து நிலையம்முதல் ராட்டிணங்கிணறு வரை 1.6 கி.மீ., மற்றும் நீதிமன்றம் அருகில் 600 மீட்டர் வரையிலும் சாலை அமைக்க, 2.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. இப்பணிகளை செயல்படுத்த டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில், புதிதாக சாலை அமைக்கும்பணி துவங்கி, நடைபெற்றுவருகிறது. இச்சாலையைஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். ஏராளமானவாகனங்கள் சென்றுவருவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பணிகளை இரவு நேரங்களில் செயல்படுத்த, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கூறியதாவது:செங்கல்பட்டுஜி.எஸ்.டி., சாலையில் புதிதாக சாலை அமைக்கும் பணி துவங்கி நடைபெற்றுவருகிறது. இம்மாதத்திற்குள் பணிகள் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !