உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கடைக்கு புது கட்டடம் சின்னகளக்காடியில் வேண்டுகோள்

ரேஷன் கடைக்கு புது கட்டடம் சின்னகளக்காடியில் வேண்டுகோள்

சித்தாமூர்:சின்னகளக்காடி கிராமத்தில், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகளக்காடி கிராமத்தில், விநாயகர் கோவில் அருகே ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதில், 120க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த ரேஷன் கடை, 30ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. நாளடைவில் கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, தளத்தின் சிமென்ட் பூச்சு உதிர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகி வருகின்றன. எனவே, உணவுப்பொருள் வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சின்னகளக்காடி கிராமத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி