மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி செய்துதர கோரிக்கை
திருப்போரூர்:திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டுமென்று கோரிக்கை எழுந்துஉள்ளது.திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து, செல்கின்றனர். பக்தர்களுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. எனினும், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துஉள்ளது.சுவாமி தரிசனத்துக்கு தனி வழி, மருத்துவ உதவி மையம், சரவண பொய்கை குளத்தில் குளிப்பதற்கு தனி இடவசதி, மாற்றுத்திறனாளிகளிடம் பணியாளர்கள் கனிவுடன் செயல்படுவதற்கான உதவி மையம் அமைத்தல், பிரத்யேக கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.