உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜமீன்புதுார் சாலையில் சேதமடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

ஜமீன்புதுார் சாலையில் சேதமடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

செய்யூர்:செய்யூர் அடுத்த இரும்பேடு அருகே நல்லுார் - வில்லிப்பாக்கம் சாலையில் இருந்து ஜமீன்புதுார் கிராமத்திற்கு செல்லும், 3 கி.மீ., அளவுடைய தார் சாலை உள்ளது.சாலையை ஜமீன்புதுார், சாலையூர், வேட்டூர், மேல்வசலை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். தினசரி பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் மக்கள் என, ஏராளமானோர் சாலையை கடந்து செல்கின்றனர்.மக்கள் பயன்பாட்டிற்காக, ஆறு ஆண்டுகளுக்கு முன் ஜமீன்புதுார் சாலையில், 20 மின் கம்பங்கள் நடப்பட்டு, தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன.நாளடைவில், முறையான பராமரிப்பு இல்லாமல், அனைத்து தெரு விளக்குகளும் பழுதடைந்துள்ளதால், தற்போது சாலை இரவு நேரத்தில் இருளில் முழ்கி காணப்படுகிறது.இதனால், விஷப்பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்திலேயே கடக்க வேண்டியுள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ