உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை

வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்க கோரிக்கை

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, செயல் அலுவலர் நியமிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுராந்தகம் அருகே திருமலை வையாவூரில், அலர்மேல் மங்கா பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. திருமலை வையாவூர் கோவில் செயல் அலுவலகத்தின் கீழ், 15க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.ஓராண்டுக்கு முன் கோவில் செயல் அலுவலர் பணிமாறுதல் பெற்று சென்றார். தற்போது, செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால், நிர்வாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக, பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.தற்காலிகமாக, மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன், இந்த திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.எனவே, திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, தனி செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை