உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

திருப்போரூர்:பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கரும்பாக்கம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், கரும்பாக்கம் கிராமத்திற்கு, ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து வருவதால், முன்னேற்பாடாக, புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், 40 லட்சம் ரூபாய் மதிப்பில், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளதால், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, கரும்பாக்கம் கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ