உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுகோள்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுகோள்

அச்சிறுபாக்கம்:தண்டரைபுதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், தண்டரை புதுச்சேரி ஊராட்சி உள்ளது. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அருகே, வேடந்தாங்கல் செல்லும் சாலையோரம், கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. இதில், 5 ரூபாய் நாணயம் போட்டு, தானியங்கி இயந்திரம் வாயிலாக 20 லிட்டர் குடிநீர் பிடித்துக் கொள்ளலாம். தண்டரை புதுச்சேரி, தண்டலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த மக்களும் பயன்பெறும் வகையில், இந்த குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல், கடந்த ஐந்து ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் அச்சிறுபாக்கம் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்து, வேடந்தாங்கல் சாலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை