உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அகரம் பகுதியில் சிமென்ட் கல் சாலை அமைக்க கோரிக்கை

அகரம் பகுதியில் சிமென்ட் கல் சாலை அமைக்க கோரிக்கை

திருப்போரூர் அகரம் பகுதியில், மண் சாலையை சிமென்ட் கல் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், மானாமதி ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராம், நேதாஜி தெருவில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலைகள், மண் சாலைகளாக உள்ளன. மழை காலத்தில், இச்சாலைகள் சகதியாக மாறுகின்றன. இந்த பகுதியில் புதிய சிமென்ட் கல் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ