உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படூர் பைபாஸ் ஆறுவழிசாலையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

படூர் பைபாஸ் ஆறுவழிசாலையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

திருப்போரூர்:ஓ.எம்.ஆர்., சாலை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை ஆறு வழிப்பாதையாக உள்ளது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை, நான்கு வழிப்பாதையாக உள்ளது. இதில், படூர், கேளம்பாக்கம் பகுதியிலும், திருப்போரூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், இங்கு புறவழிச்சாலையாக ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.அதன்படி, படூர் - - தையூர் இடையே ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர் --- ஆலத்துார் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.படூர் -- தையூர் இடையிலான புறவழிச்சாலை 4.67 கி.மீ., அமைக்கப்பட்டு பணி முடியும் தருவாயில் உள்ளது. திருப்போரூர் -- ஆலத்துார் இடையிலான புறவழிச் சாலை 7.45 கி.மீ., அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு புறவழிச்சாலைகளுக்கும் மொத்தம், 465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்நிலையில், படூர் -- ஓ.எம்.ஆர்., சாலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலை குறுக்கே தான் படூர் புறவழிச்சாலையான ஆறுவழிச்சாலை செல்கிறது.இந்த ஆறுவழிச்சாலை அமைந்த பகுதிவழியாக தான் அப்பகுதியினர் மற்றும் பள்ளி மாணவர்கள், கல்வி, தொழில் நிறுவனங்கள் என அனைத்து தேவைக்கும் சென்று ஓ.எம்.ஆர்., சாலையை அடைகின்றனர்.ஆனால், இந்த பிரதான சாலை குறுக்கே ஆறுவழிச்சாலை செல்வதால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சாலையை கடந்து செல்கின்றனர். விபத்தை தடுக்க அங்கு, வேகத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அதை நிரந்தர தீர்வாக மக்கள் கருதுவதில்லை.அதே பகுதி தனியார் கல்லுாரி வளாகத்திற்கு இடையேயும் ஆறுவழிச்சாலை செல்கிறது. ஆனால் அங்கு மாணவர்களின் பாதுகாப்பு கருதி மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு மாணவர்கள் பாதுகாப்பாக கல்லுாரி வளாகத்திற்குள் சென்று வருகின்றனர்.அதுபோல மக்களின் பாதுகாப்பு கருதி படூர் ஆறுவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை