உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பரனுார் காப்புக்காடு பகுதியில் சுற்றுசுவர் அமைக்க கோரிக்கை

பரனுார் காப்புக்காடு பகுதியில் சுற்றுசுவர் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு:பரனுார் காப்புக்காடு பகுதியில், கோடை காலங்களில் தீ பற்றி எரிவதை தடுக்க, தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த, பரனுார் கிராமத்தில் காப்புக்காடு உள்ளது. இங்கு, மான், முயல் உள்ளிட்ட பல்வேறு விளங்குகள் உள்ளன. இதன் அருகாமையில், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு, சாலையோரங்கள் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காப்புக்காடு பகுதியில், கோடைக்காலங்களில் மர்ம நபர்கள் செடிகளை கொளுத்துகின்றனர். இதில், மரங்கள் ஏரிந்து சேதமடைகிறது.தகவல் அறிந்து வரும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதை தடுக்க, காப்புகாடு பகுதியில், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வனத்துறையிடம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். அதன்பின், வனத்துறையினர், காப்புக்காடு அருகாமை, நெடுஞ்சாலை பகுதியில், சுற்றுசுவர் அமைக்க, உயர் அதிகாரிகளுக்கு, கருத்துரு அனுப்பி வைத்தனர். எனவே, காப்புக்காடு பகுதியில், நெடுஞ்சாலையோரமாக தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை