உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆப்பூர் கல் குவாரி பள்ளத்திற்கு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

ஆப்பூர் கல் குவாரி பள்ளத்திற்கு தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகில் ஆப்பூர் கிராமத்தில் உள்ள கல்குவாரி பள்ளத்தை சுற்றி, தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில், வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி பள்ளம் உள்ளது. இது 500 அடி வரை ஆழம் உடையது. இதில் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள், இங்கு வார இறுதி நாட்களில் வந்து, குளித்து செல்கின்றனர். அவ்வாறு வருவோரில் சிலர், அங்கேயே அடுப்பு மூட்டி சமையல் செய்கின்றனர். பின் மது அருந்தி, போதையில் கல்குவாரி பள்ளத்தில் குளிக்கின்றனர். கல்குவாரி பள்ளம் குறித்து விழிப்புணர்வு இல்லாததால், அங்கு துணி துவைப்பது, நீச்சல் பழகுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு மது போதையில், வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். எனவே, கல்குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து, எச்சரிக்கை பலகை வைத்து, யாரும் அருகில் செல்ல முடியாதபடி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை