மேலும் செய்திகள்
மக்கள் கட்டிய ரேஷன் கடை 3 ஆண்டாக வீணாகும் அவலம்
06-Oct-2025
அச்சிறுபாக்கம்:சித்தாத்துாரில் உள்ள ரேஷன் கடை பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சியில், சித்தாத்துார் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டு, செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகி வந்தன. இதனால், சமீபத்தில் வாடகை கட்டடத்திற்கு ரேஷன் கடை மாற்றப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷன் கடை பழைய கட்டடம் அருகே பள்ளி மற்றும் பயணியர் நிழற்குடை உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, ரேஷன் கடை பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக அப்பகுதியில் ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட வேண்டுமென, சித்தாத்துார் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
06-Oct-2025