உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய சமுதாய நலக்கூடம் முகையூரில் அமைக்க கோரிக்கை

புதிய சமுதாய நலக்கூடம் முகையூரில் அமைக்க கோரிக்கை

கூவத்துார்:முகையூரில் பழுதடைந்துள்ள சமுதாய நலக்கூடத்தை அகற்றி, புதிய சமுதாய நலக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கூவத்துார் அருகே முகையூர் கிராமத்தில், அரசு பள்ளி அருகே 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் உள்ளது.பெருந்துறவு, முகையூர், மஞ்சள்விளாகம், தென்பட்டினம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது குடும்பங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளான திருமணம், சீமந்தம், பிறந்தநாள் விழா, காதணி விழா போன்ற விழாக்களை, இங்கு நடத்தி வந்தனர்.கடந்த 10 ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால், நாளடைவில் பழுதடைந்து, சமுதாய நலக்கூடம் செயல்படாமல் உள்ளது.இதனால், இப்பகுதி மக்கள் தங்களது குடும்பங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளை கொண்டாட கூவத்துார், செய்யூர், கடப்பாக்கம் என, 15 கி.மீ., துாரத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், தனியார் திருமண மண்டபங்களில் வாடகை 20,000 முதல் 50,000 வரை வசூலிக்கப்படுவதால் சிரமப்படுகின்றனர்.இதனால் ஏழை, எளிய மக்கள் சுபநிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதி மக்களின் நலன் கருதி, முகையூரில் பழுதடைந்து உள்ள சமுதாய நலக்கூடத்தை அகற்றி, புதிய சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். அதன் வாயிலாக ஊராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ