மேலும் செய்திகள்
மாடுகள் இறப்பை தடுக்க கோரிக்கை
25-Jul-2025
பொன்விளைந்தகளத்துார்:பொன்விளைந்தகளத்துாரில், நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த, பொன்விளைந்தகளத்துார், ஒத்திவாக்கம், கொல்லமேடு உள்ளிட்ட கிராமங்களில், 2,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு, ஏரி, கிணற்று நீர்பாசனம் மூலம், விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், ஏரி பாசனம், கிணற்று பாசனம் முறையிலும், விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். விவசாயிகள் நலன்கருதி, நிரந்தரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டரிடம், விவசாயிகள் மனு அளித்துள்ளனர். விவசாயிகள் நலன்கருதி, நிரந்தரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Jul-2025