உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாபுராயன் பேட்டையில் கலையரங்கம் அமைக்க கோரிக்கை

பாபுராயன் பேட்டையில் கலையரங்கம் அமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம்:பாபுராயன் பேட்டை ஊராட்சியில் கலையரங்கம் அமைக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாபுராயன் பேட்டை ஊராட்சியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பாபுராயன் பேட்டை நியாயவிலை கடை அருகே உள்ள காலி இடத்தில், கலையரங்க மேடை அமைக்க வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அச்சிறுபாக்கம் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி