உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பஸ் நிறுத்த தடுப்புச்சுவரால் அச்சம் ஒளிரும் பட்டை அமைக்க கோரிக்கை

பஸ் நிறுத்த தடுப்புச்சுவரால் அச்சம் ஒளிரும் பட்டை அமைக்க கோரிக்கை

மறைமலை நகர் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தாம்பரம் மார்க்கத்தில் ராஜகுளிப்பேட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது.இங்கு பேருந்துகள் நின்று செல்ல, தனியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாதைக்காக தடுப்புச்சுவர் இருப்பது இரவு நேரங்களில் தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால், தடுப்புச்சுவரில் ஒளிரும் வண்ண பட்டை அமைக்க வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:ராஜகுளிப்பேட்டை நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில், ஜி.எஸ்.டி., சாலையில் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், தடுப்புச்சுவர் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.புதிதாக வரும் வாகன ஓட்டிகள், தடுப்புச்சுவர் இருப்பது தெரியாமல் தடுமாறி வருகின்றனர். விபத்து மற்றும் உயிர் பலி ஏதும் ஏற்படும் முன், இந்த பகுதியில் இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்க வேண்டும். மேலும், எரியாமல் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ