உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலுார் -- கண்டிகை சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

பாலுார் -- கண்டிகை சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:பாலுார் -- கண்டிகை சாலையில் மின் விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலுார் -- கண்டிகை சாலை 10 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலை வழியாக பாலுார், வில்லியம்பாக்கம், ரெட்டிபாளையம், கொளத்தாஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒரகடம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து ஜல்லி, எம்-சாண்ட் மணல் உள்ளிட்டவை ஏற்றிச்செல்லும் அதிக கனரக வாகனங்களும், தினமும் இந்த சாலையில் செல்கின்றன. ரெட்டிபாளையம், கரும்பாக்கம் கிராமங்களில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்து லோடு ஏற்றி செல்லும் லாரிகளும், அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து கும்மிருட்டாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, பாலுார் -- கண்டிகை சாலையில் மின் விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி