உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மூகாம்பிகை கோவில் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை

மூகாம்பிகை கோவில் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை

வண்டலுார்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி, சிங்காரத் தோட்டம் பகுதியில், 50 ஆண்டுகள் பழமையான மூகாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் முன்பாக உள்ள சாலையில், தினமும் விபத்துகள் நடப்பதால், இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வண்டலுார், ஓட்டேரி விரிவு பகுதியிலிருந்து துவங்கும் 15 அடி அகலம் உள்ள தார்ச்சாலை, இக்கோவிலை கடந்து, 2 கி.மீ., துாரத்தில் உள்ள பெருங்களத்துார் ரயில் நிலையத்தை அடைகிறது. வண்டலுார் -- பெருங்களத்துார் இடையிலான ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, இலகுரக வாகன ஓட்டிகள் இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர். இந்த சாலை வண்டலுார், சிங்காரத் தோட்டத்தில் உள்ள மூகாம்பிகை கோவில் அருகே வளைவாக செல்வதால், கோவிலைக் கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு, எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், கோவில் முன்பாக தினமும் வாகனங்கள் எதிரெதிரே மோதி, விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சாலை வளைவில் வாகனங்கள் அதிவேகத்தில் வருவதை தடுக்கவும், விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், மூகாம்பிகை அம்மன் கோவில் அருகே, சாலையின் இரு மார்க்கத்திலும் வேகத்தடை அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை