உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எடையான்குப்பம் கூட்டு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

எடையான்குப்பம் கூட்டு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

திருப்போரூர்:திருப்போரூர் அருகே உள்ள எடையான்குப்பம் கூட்டுச் சாலையிலிருந்து செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.திருப்போரூர் அருகே தண்டலம் ஊராட்சி, எடையான்குப்பம் கூட்டுச் சாலையிலிருந்து செங்கல்பட்டு சாலை, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையில், இடையே சிறுதாவூர், ஆமூர், மானாமதி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. திருப்போரூரிலிருந்து மானாமதி வரை நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, 28 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.அதேபோல், திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., உள்ளது. இரு வழிப்பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.இதனால், இச்சாலையில் வழக்கத்தை விட நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதிலும், புதிய சாலை அமைத்ததால் வாகனங்களின் வேகமும் அதிகரித்துள்ளது. மேற்கண்ட முக்கிய இரண்டு சாலைகள் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பதாலும், பிரிவதாலும் வாகனங்கள் அதிவேகத்தில் வரும் போது, விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, அப்பகுதியில் வேகத்தடை அல்லது இரும்பு தடுப்பு, எச்சரிப்பு பலகை போன்ற பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ