உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கூடுதல் ரேஷன் கடைகள் ஊரப்பாக்கத்தில் திறக்க கோரிக்கை

 கூடுதல் ரேஷன் கடைகள் ஊரப்பாக்கத்தில் திறக்க கோரிக்கை

ஊரப்பாக்கம், ஊரப்பாக்கத்தில், மக்கள் தொகைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் இல்லாததால், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், கூடுதலாக மூன்று கடைகளை திறக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்டலுார் தாலுகா, ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகளில், 80,000க்கும் மேற்பட்ட நபர்கள் வசிக்கின்றனர். இங்கு எட்டு ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் பாரதி நகர், பிரியா நகர் மற்றும் கிளாம்பாக்கத்தில் உள்ள நான்கு கடைகளுக்கும், 1,000 கார்டுதாரர்களுக்கு குறைவாக உள்ளதால், கூட்ட நெரிசல் இன்றி பொருட்கள் கிடைக்கின்றன. மீதமுள்ள ஒவ்வொரு கடைக்கும் 2,200 கார்டுதாரர்களுக்கு மேல் உள்ளதால், பொருட்கள் வாங்க வரும் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, கூடுதலாக மூன்று ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என, பகுதி மக்கள் புகார் எழுப்பி உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், கூடுதல் எண்ணிக்கையில் ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ