உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை

சூணாம்பேடு, சூணாம்பேடு பஜார் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. மணப்பாக்கம், புதுப்பட்டு, அரசூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுராந்தகம், செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.பேருந்து நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்தாண்டு 25 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைக்கப்பட்டது.இந்நிலையில், பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல், பேருந்திற்காக காத்திருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சூணாம்பேடு பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ