உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உயர்த்தி அமைக்க வேண்டுகோள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உயர்த்தி அமைக்க வேண்டுகோள்

திருப்போரூர்:பெரிய இரும்பேடு கிராமத்தில், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம் நிலவுவதால், உயர்த்தி அமைக்க வேண்டுமென கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த பெரிய இரும்பேடு கிராமம், பள்ளிக்கூட தெருவில், மின்தடம் தாழ்வாக செல்கிறது. இதில் உள்ள மின்கம்பிகள், மிகவும் தாழ்வாக செல்கின்றன. அங்கு பள்ளி, ஊராட்சி அலுவலகம், நுாலகம், ரேஷன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் வீடுகள் உள்ளன. இச்சாலை வழியாக செல்லும் மாணவர்கள், கிராம மக்கள் விபத்தில் சிக்கும் வகையில், இந்த மின் கம்பிகள் உள்ளன. எனவே, பாதுகாப்பு கருதி, இந்த மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை