மின் கம்பங்களில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை
மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சி, 15வது வார்டு பகுதியில், மின் கம்பங்களில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. கருங்குழி பேரூராட்சியில், 15வது வார்டுக்கு உட்பட்ட படவேட்டம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, பச்சையம்மன் கோவில் தெரு, கோட்டர்ஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மின்விளக்கு கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் உள்ள மிக்சி, கிரைண்டர், 'டிவி', குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி, பகுதிவாசிகள் வேதனைப்படுகின்றனர். எனவே, கருங்குழி மின்வாரிய துறையினர், மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.