உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சமுதாய கூடத்தை சீரமைக்க கோரிக்கை

 சமுதாய கூடத்தை சீரமைக்க கோரிக்கை

செய்யூர்: நெடுமரம் ஊராட்சியில் பழுதடைந்துள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவு ஞ்சூர் அருகே நெடுமரம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனி பகுதியில், மாரியம்மன் கோவில் அருகே, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக் கூடம் உள்ளது. நெடுமரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது குடும்பங்களின் நடக்கும் பிறந்தநாள், காதணி விழா போன்ற சுப நிகழ்ச்சிகளை சமுதாய நலக்கூடத்தில் நடத்தி வந்தனர். முறை யான பராமரிப்பு இல்லாமல் நாளடைவில், சமு தாய நலக்கூடத்தின் மேல்தளத்தில் உள்ள கான்கீரிட் பூச்சு உதிர்ந்து தற்போது இடிந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ