சாலை பள்ளம் சீரமைக்க கோரிக்கை
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மைலை கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி சாலை சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனை அறியாமல் இந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.எனவே, ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.