சி.சி.டி.வி கேமரா சீரமைக்க கோரிக்கை
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி நுழை வாயிலில் உள்ள கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வேண்டமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் பேரூராட்சி நுழை வாயில் பகுதியில் பேரூராட்சியில் இருந்து பஜார் பகுதிக்கு செல்லும் சாலையை கண்காணிக்கும் வகையிலும், பேரூராட்சி எதிரில் உள்ள பயணியர் நிழற்குடையை கண்காணிக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இந்நிலையில் சில மாதங்களாக, கண்காணிப்பு கேமரா பழுதடைந்து, ஒயர்கள் அறுந்து, பயன்பாடு அற்று, காட்சி பொருளாக உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அச்சிறுபாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமராவை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.