பேருந்து நிறுத்த நிழற்குடை சீரமைக்க கோரிக்கை
சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த சின்னவெண்மணி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஜமீன் எண்டத்துார் செல்லும் சாலை ஓரத்தில் சின்னவெண்மணி பேருந்து நிறுத்தம் உள்ளது .இதை மதுராந்தகம், செங்கல்பட்டுபோன்ற வெளியூர்களுக்கு செல்பவர்கள், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவியர் பயன் படுத்துகின்றனர்.முறையான பாரமரிப்பு இன்றி நிழற்குடையில் இருக்கைகள் இல்லாமல், டைல்ஸ் உடைந்து சேதமடைந்து உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பேருந்து நிறுத்த நிழற்குடை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.