பழுதான சாலையை சீரமைக்க கோரிக்கை
திருப்போரூர்: பழுதான சாலையை சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த மேலையூரில் நாகபரணீஸ்வரர் கோவில் உள்ளது. ராகு, கேது தோஷம் உள்ளோர் இக்கோவிலில் வழிபட்டால், திருமண தடை நீங்குவதோடு, குழந்தைபேறு, தீராத நோய்களும் குணமடைவதாக, பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், மேலையூர் பிரதான சாலையிலிருந்து இக்கோவிலுக்கு பிரிந்து செல்லும் சாலை 50 மீட்டர் பழுதடைந்து உள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு வர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். பழுதான இந்த சாலையை சீரமைத்து தர பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள், பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.