உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழைநீர் கால்வாயில் கழிவுநீர் துார் வாரி சீரமைக்க கோரிக்கை

மழைநீர் கால்வாயில் கழிவுநீர் துார் வாரி சீரமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:ஸ்ரீவாரி நகரிலுள்ள மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் தேங்குவதால், துார் வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி, 20வது வார்டில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், ஸ்ரீவாரி நகர் பகுதியிலுள்ள முக்கிய தெருக்களின் இருபுறமும், மழைநீர் வடிகால்வாய் உள்ளது. சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த மழைநீர் வடிகால்வாயில் தேங்கி, நிரம்பி வழிகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது. இதுகுறித்து, அப் பகுதியில் வசிப்போர் கூறியதாவது: பிளாஸ்டிக் குப்பை மற்றும் மண் உள்ளிட்டவை வடிகால்வாய் முழுதும் அடைத்து உள்ளதால், கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து, அவதிப்பட்டு வருகிறோம். மேலும், மழைக்காலத்தில் செங்குன்றம் ஏரியின் உபரிநீர் இந்த கால்வாய் வழியாக செல்லும் போது, கழிவுநீருடன் கலந்து ஸ்ரீவாரி நகர் முழுதும் பரவி கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த மழைநீர் வடிகால்வாயை துார் வாரி சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி