உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கடை கவலைக்கிடம் புதிதாக அமைக்க கோரிக்கை

ரேஷன் கடை கவலைக்கிடம் புதிதாக அமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம், : அச்சிறுபாக்கம் அருகே பாபுராயன்பேட்டை ஊராட்சியில், 24 ஆண்டுகளுக்கு முன், ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.தற்போது, பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த ரேஷன் கடையை 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, சில பகுதிகள் இடிந்து விழுகிறது.எனவே, ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். சேதமடைந்த பழைய ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே பகுதியில் புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை