உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறுகலான திருப்போரூர் - நெம்மேலி சாலை இருவழி சாலையாக அகலப்படுத்த கோரிக்கை

குறுகலான திருப்போரூர் - நெம்மேலி சாலை இருவழி சாலையாக அகலப்படுத்த கோரிக்கை

திருப்போரூர்:திருப்போரூர் - நெம்மேலி சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், இருவழிச் சாலையாக அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருப்போரூர்- - நெம்மேலி சாலையை திருப்போரூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, தண்டலம், ஆலத்துார், சிறுதாவூர், ஆமூர், செம்பாக்கம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.இங்குள்ள பகிங்ஹாம் கால்வாய்க்கு இடையே, 3 கி.மீ., செல்லும் இச்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டதால், இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையை இணைக்கும் பிரதான சாலையாக மாறியுள்ளது.மேலும், இச்சாலை இடையே ஆறுவழிச் சாலையும் செல்கிறது.இந்த பிரதான சாலையின் அகலம் குறைவாகவும், ஒருவழிச் சாலையாகவும் இருப்பதால், எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியவில்லை.இதனால், அடிக்கடி சிறு சிறு விபத்துகளும், வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.மேலும், சாலையின் இருபுறமும் முட்செடிகளும், பள்ளங்களும் உள்ளன.எனவே, இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என, பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.குறிப்பாக, இந்த திருப்போரூர் - நெம்மேலி சாலையில், கந்தசுவாமி கோவில் கிழக்கு மாடவீதி முதல் ஆறுவழிச் சாலை வரை 500 மீட்டர் துாரம், கந்தசுவாமி கோவிலுக்கு வரும் வாகனங்களால், விசேஷ நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, முதற்கட்டமாக இந்த 500 மீட்டர் சாலையையாவது, இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ