உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாரியை மடக்கி பிடித்த எஸ்.ஐ.,க்கு குடியிருப்போர் நலச்சங்கம் பாராட்டு

லாரியை மடக்கி பிடித்த எஸ்.ஐ.,க்கு குடியிருப்போர் நலச்சங்கம் பாராட்டு

குரோம்பேட்டை:பரனுார் சுங்கச்வாடியில் இருந்து டிப்பர் லாரி ஒன்று, மே., 20ம் தேதி, போக்குவரத்து சிக்னலை பின்பற்றாமல், பலமுறை எச்சரித்தும் நிறுத்தாமல் செல்வதாக தகவல் கிடைத்தது.அப்போது, பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., முருகன், தடுப்புகள் வைத்து, லாரியின் வேகத்தை குறைத்து, லாரியின் படியில் ஏறி நிறுத்த முயன்றார். அப்போதும், லாரி நிற்காமல் சென்றது.முருகன், நான்கு கி.மீ., துாரம் படியிலேயே நின்றபடி பயணித்தார். இறுதியில், அந்த லாரி, தடுப்பு சுவரில் மோதி நின்றது.இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு எஸ்.ஐ., முருகனுக்கு, குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு மையம் சார்பில், நேற்று பாராட்டு விழா நடந்தது.மையத்தின் தலைவர் சந்தானம் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில், முருகனுக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, ஸ்ரீஅய்யாசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளியில், பத்து மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி